தமிழ்சினிமாவின் நூற்றாண்டு தொடக்க விழா வரும் ஜனவரி 20ம் தேதி மாலை 4
மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்
சங்கம் நடத்தும் இந்த விழா, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமானது.
திரையுலகைச் சார்ந்தவர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை
கொண்டாடும் விதமாக எந்த விழாவையும் முன்னெடுக்காத சூழலில் தமிழத் திரையுலகின் 23 சங்கங்களையும் அழைத்து இந்த விழாவை நடத்துகிறது தமுஎகச.
சென்னை, பாரிமுனையிலுள்ள அண்ணாமலை மன்றத்தில் வைத்து நடைபெறும் இந்த விழாவுக்கு திரைப்பட நடிகை ரோகினி தலைமை தாங்க, எடிட்டர்.பி.லெனின் மற்றும் இயக்குநர் எஸ்.வசந்த் சாய் முன்னிலை வகிக்கிறார்கள். எஸ்.பி.முத்துராமன், சிவகுமார், பாக்கியராஜ், எஸ்.பி.ஜனநாதன், ராஜூமுருகன், சிம்புதேவன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களும் கலந்துகொள்கிறார்கள்.
விழாவில் தமிழ் திரையுலகிற்கு தொண்டாற்றி மறைந்த T.P.ராஜலட்சுமி, ராஜா சாண்டோ, பி.யூ.சின்னப்பா, P.கண்ணாம்பாள், என்.எஸ்.கிருஷ்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய ஆளுமைகளின் வழித்தோன்றல்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வும் நடைபெறுகிறது. அஜயன்பாலா எழுதிய ‘மௌனம் பேசியதே- தமிழ்சினிமா வரலாறு’ நூலும் வெளியிடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...