Home »
» பேச்சு நடத்த அமைச்சரை அழைத்த ஆசிரியர்கள் கைது
தமிழக பள்ளிக் கல்வி துறையின், அனைவருக்கும்
கல்வி இயக்க திட்டத்தில், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்,
தொகுப்பூதியத்தில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி
நிரந்தரம் கோரி, சென்னை, சேப்பாக்கத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு, காலை, 11:00 மணி முதல், 12:00 மணி
வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திடீரென, அமைச்சர் பாண்டியராஜன், நேரில்
பேச்சு நடத்த வரும் வரை, ஆர்ப்பாட்டம் தொடரும் என, அவர்கள் அறிவித்தனர்.
அனுமதி நேரத்தை தாண்டி, ஆர்ப்பாட்டம் நடத்தியதால், நுாற்றுக்கணக்கான
ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...