தமிழகத்தில், வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர்களுக்கு உத்தரவு:
இது குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:வடகிழக்கு
பருவமழை பொய்த்து விட்டதால், மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகி
உள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி
மாவட்டங்களில், 10 சதவீத அளவு கிராமங்களில் பயிர் நிலை நேரடி ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே மாவட்டங்களை வறட்சி பாதித்தவையாக அறிவிக்க இயலும்.எனவே, சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, மாவட்ட கலெக்டர்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதை மேற்பார்வையிட்டு அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்க ஏதுவாக, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உடனடியாக அமைக்கப்படும்.
இந்த குழுக்கள் ஜன.,9ம் தேதி வரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, ஜன.,10ம் தேதி தங்கள் அறிக்கையை அரசுக்கு அளிக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...