அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ்
அறிவிக்கப்படவில்லை.
அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஓவியம், தையல், இசை, நடனம், கணினி
அறிவியல், தோட்டக்கலை போன்ற பல சிறப்பு பாடங்களை, இந்த ஆசிரியர்கள்
நடத்துகின்றனர்.
இந்த ஆசிரியர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் மட்டுமே
சம்பளம் வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, கோரிக்கை
விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அரசு அறிவித்த பொங்கல் சிறப்பு போனஸ்,
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், மற்ற ஆசிரியர்களை போல,
பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர், கே.தியாகராஜன்
கூறுகையில், ''சி மற்றும் டி ஊழியர்கள் போல, பகுதி நேர ஆசிரியர்களுக்கும்,
3,000 ரூபாய் போனஸ் வழங்க வேண்டும்,'' என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...