பி.எப்., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்,
ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல, பி.எப்., ஆணையர் சலில் சங்கர், வெளியிட்டுள்ள செய்தி:
பி.எப்., திட்டத்தின்கீழ், ஊழியர்களை சேர்க்காத நிறுவனங்களுக்கு, மற்றொரு
வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, 1.4.2009 முதல், 31.12.2016 வரையிலான
காலத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்களை, பி.எப்., திட்டத்தில் சேர்த்து கொள்ள
முடியும்; இந்த வாய்ப்பு, இம்மாதம், 1ல் துவங்கி, வரும், மார்ச், 31 வரை
மட்டுமே அளிக்கப்படும். இதற்காக, நிறுவனத்தின் பங்கு, ஊழியரின் பங்கு, உரிய
வட்டியை, விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஊழியருக்கான
சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படாவிட்டால், அதை செலுத்த
வேண்டியதில்லை. மேலும், ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒரு ரூபாய் வீதம், அபராதக்
கட்டணத்தையும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.முழுமையாக பூர்த்தி
செய்யப்படாத, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை செலுத்தாத விண்ணப்பங்கள்
ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விடுபட்ட ஊழியர்களை
சேர்ப்பதால், அவர்களுக்கு பி.எப்., திட்டப் பலன்கள் முழுமையாக கிடைப்பதை,
நிறுவனங்கள் உறுதி செய்யலாம்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...