டேட்டாஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம், டேட்டா மெயில் என்ற பிராண்டு பெயரில்,
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட, பல பிராந்திய மொழிகளில்,
மின்னஞ்சல் முகவரி சேவையை வழங்கி வருகிறது.இந்நிறுவனம், டேட்டா மெயில் மின்னஞ்சல் சேவையுடன், குரல் வழி அடிப்படையில் செய்திகளை அனுப்பும் வகையில், சமூக ஊடக வசதியை, தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின்
தலைமை செயல் அதிகாரி அஜய் தத்தா கூறியதாவது: டேட்டா மெயில் சேவையுடன், ‘டேட்டா ரேடியோ’ வசதி இணைக்கப்பட்டு உள்ளது. இந்த வசதி மூலம், டேட்டா மெயில் பயனாளர்கள், தங்களுடைய பெயரில், ஒரு ரேடியோ சேனலை உருவாக்கி கொள்ளலாம். அதன் மூலம், செய்திகளை அனுப்பலாம்.இதன் மூலம், பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தனிப்பட்ட நபர்கள் என, அனைவரும், தங்களின் தகவல்களை, தட்டச்சு செய்தும், குரல் வழி மூலமாகவும், குழுவில் உள்ளவர்களுக்கு அனுப்பலாம்.இதனால், சமூக வலைதளங்களில், பிரபல நட்சத்திரங்களின் பெயரில், விஷமிகளால் பரப்பும் தொல்லைக்கு முடிவு கட்டப்படும்.டேட்டா ரேடியோவில், தேவைக்கேற்ப புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...