'பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால்,
அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படாது' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
'பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால், அதற்கு, ஒரு சதவீதம் வரையிலான சேவை கட்டணத்தை,
டீலர்கள் ஏற்க வேண்டும்' என, வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், 'இனி, இந்த கார்டுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது' என, டீலர்கள் அறிவித்திருந்தனர்.
டீலர்கள் ஏற்க வேண்டும்' என, வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், 'இனி, இந்த கார்டுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது' என, டீலர்கள் அறிவித்திருந்தனர்.
ஆலோசனை
இந்நிலையில், வரும், 13ம் தேதி வரை, இந்த சேவை கட்டணம் வசூலிக்கப்படாது' என,
வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கார்டுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என்ற முடிவை, தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக, டீலர்கள் அறிவித்திருந்தனர்.இந்த பிரச்னை குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன், நேற்றுஆலோசனை நடத்திய பின், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது, அதற்கான பயன்பாட்டு கட்டணத்தை, பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என,
ஏற்கனவே அறிவிக்கப் பட்டது.
ஏற்கனவே அறிவிக்கப் பட்டது.
விரைவில் முடிவு
'டிஜிட்டல்' பரிவர்த்தனையை, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது; அதன்படி, பெட்ரோலுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களிடம் இருந்து, எந்த சேவை கட்டணமும்வசூலிக்கப்படாது.
வசூலிக்கப்படாது
அதே போல், பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் டீலர்கள், ஒப்பந்த அடிப்படையில் செயல்படுவதால், அவர்களிடம் இருந்தும் இந்த
சேவை கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த சேவை கட்டணத்தை யார் ஏற்பது என்பது குறித்து, எண்ணெய் நிறுவனங்களும், வங்கிகளும் பேசி வருகின்றன.
சேவை கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த சேவை கட்டணத்தை யார் ஏற்பது என்பது குறித்து, எண்ணெய் நிறுவனங்களும், வங்கிகளும் பேசி வருகின்றன.
விரைவில், இதில் முடிவு எடுக்கப்படும்.அதன்படி, பெட்ரோல், டீசலுக்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது, அதற்கான சேவை கட்டணத்தை, நுகர்வோரிடம் இருந்தும், டீலரிடம் இருந்தும் வசூலிக்கப்படாது என்ற உறுதியை அளிக்கிறோம். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, 0.75 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் திட்டமும் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...