நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு...
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர நீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில்
சில தினங்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம்
தீவிரமடைந்துள்ளது. அவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்கள், பெண்கள் என
அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை
விடுமுறை என அனைத்து தரப்பினரும் அறிவித்தனர். இதனால் பெரும்பாலான
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.
கடந்த சில நாட்களாக தலைமையே இல்லாமல் அறவழியில் தமிழகம் முழுவதும் அமைதியாக
நடத்தப்படும் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளதுடன் வரலாற்று சாதனையாக பேசப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழக அரசு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை
பிறப்பித்தது. இந்த அறிவிப்பிற்கு உற்சாகம் அடையாத இளைஞர்கள் கூட்டம்,
தற்காலிக தீர்வு என்பது எங்கள் நோக்கமல்ல! முந்தைய காலங்களில் நடந்தது
போலவே கண்துடைப்பாக ஏதேனும் அறிவித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய
அனுமதிக்க மாட்டோம். நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஜல்லிக்கட்டை எந்த
இடையூறும் இல்லாமல் இனி ஆண்டாண்டு காலம் நடத்தச் செய்யும் வகையில் காட்சிப்
பட்டியல் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்ற நிரந்தரத் தீர்வை
எட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துவிட்டு ஆறாவது
நாளாகத் எழுச்சிப்போராட்டம் தொடருவதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள்
இயங்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல
இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் அண்ணா
பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் நாளை
வழக்கம் போல இயங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...