புதுச்சேரியில் அதிகார மோதல் வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் நிலையில், புதுச்சேரிக்கு
புது ஆளுநாராக முன்னாள் பெண் போலிஸ் அதிகாரியான கிரண்பேடியை மத்திய பாஜக
நியமித்தது. கிரண்பேடி
பதவியேற்றதிலிருந்தே மாநில அரசுக்கும், அவருக்கும் மோதல்போக்கு ஏற்பட்டது.
அப்போது, சமுகநலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆளுநர் போக்கை விமர்சித்து, குப்பை அள்ளியது போதும் மத்திய அரசுயிடம் நிதிவாங்கி கொடுங்கள் என்று பேசினார். இந்த நிலையில்தான், புதுச்சேரி தகவல் தொடர்புத் துறை இயக்குனராகவும், கூட்டுறவுத்துறை பதிவாளராகவும் இருந்த சிவக்குமார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள், அனிமேஷன் ஆபச படத்தை ஆளுநர் வாட்ஸ்-அப் குரூப்க்கு அனுப்பிவிட்டார் தவறுதலாக. உடனடியாக, அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார்,
ஆனால், ஆளுநர் கிரண்பேடி இதுகுறித்து, போலீஸ் அதிகாரியிடம் சொல்லி டிசம்பர் 30-ஆம் தேதி காலையிலியே சிவக்குமாரை காவல் துறை கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். பின்னர் இது குறித்து, அனைத்து அமைச்சர்களும் ஒன்று கூடி போலிஸ் உயர் அதிகாரிகளிடம் சட்டரீதியாக பேசினர். அதனைத்தொடர்ந்து, வழக்கு மட்டும் போட்டுவிட்டு சிவக்குமாரை அனுப்பி வைத்தது காவல்துறை.
அன்று இரவு புதுச்சேரியில் உள்ள பிரபலமான ஹோட்டலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ,கள், மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் நாராயனசாமி ரகசிய கூட்டம் நடத்தினார், கூட்டத்தில் நிர்வாகத்துக்கு முட்டுகட்டையாக இருந்துவரும் ஆளுநருக்கு எதிராக இனி கருத்துகளும், மக்கள் போராட்டமும் இருக்கட்டும் என்று கடுமையாக விவாதித்துள்ளார்கள். அதைதொடர்ந்துதான் சமுகநலத்துறை அமைச்சர் கந்தசாமி பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, ஆட்சியாளர்கள் மற்று மக்கள் நம்பிக்கையை இழந்த ஆளுநரை மத்திய அரசு திரும்பபெறவேண்டும் என்று கடுமையாக பேசினார்,
ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்குமிடையே மோதல் உருவாகியிருப்பதால் நிர்வாகம் ஸ்தம்பித்து மக்கள் நலத் திட்டங்கள் முடங்கி போயுள்ளது என்கிறார்கள், புதுச்சேரி மக்கள்.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையே எந்த மோதல் போக்கும் இல்லை. கருத்து வேறுபாடும் இல்லை. கவர்னர் தனது அதிகாரத்துக்குட்பட்டு அவர் செயல்படுகிறார். நாங்கள் எங்கள் அதிகாரத்துக்குட்பட்டு செயல்படுகிறோம். அதிகாரி சிவகுமார் விவகாரம் தொடர்பாக நான் தேவையான தகவல்களை கேட்டு வருகிறேன். அதன் பிறகுதான் இதில் கருத்து சொல்ல முடியும் என்று அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...