மின் புகார் தெரிவிப்பதற்கான, 1912 என்ற
தொலைபேசி எண் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, மாநில
மின் வாரியங்களை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்
வாரியத்துக்கு, சென்னை உட்பட, கணினி மின் தடை நீக்கும் மையங்கள் உள்ளன.
அந்த பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர், மின் தடை தொடர்பாக, '1912' என்ற
தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
அங்கு பெறப்படும்
புகார், பிரிவு அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. இதேபோல், பல மாநிலங்களிலும், மின் தடை நீக்கும் மையங்கள்
உள்ளன. அங்கும், மேற்கண்ட எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஆனால், மாநில
மின் வாரியங்கள், அந்த தொலைபேசி எண் குறித்த விபரத்தை, நுகர்வோரிடம்
தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய மின் துறை அமைச்சகம், மின்சாரம் தொடர்பான புகார் எண் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மாநில மின் வாரியங்களை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும், மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை, 1912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். ஆனால், அந்த எண், பலருக்கு தெரியவில்லை. அதை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மாநில மின் வாரியங்கள், விளம்பரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...