Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'தமிழுக்காக தமிழ் கருவும் போராடும்' - கைக் குழந்தை, புதுமணத் தம்பதி - உணர்ச்சிமிகு காட்சிகள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் இளைஞர்களின் எழுச்சி மிகு அறவழிப் போராட்டம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் இன்று 3வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரியும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஆங்காங்கே அறவழிப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தில்லி மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாய், நேற்று 6 மாதக் கைக் குழந்தையுடன் ஒரு பெற்றோர் போராட்டக் களத்துக்கு வந்து, இளைஞர்களுடன் அமர்ந்து போராடினர்.
மேலும், கோவையில், நேற்று காலை திருமணம் முடித்த புதுமணத் தம்பதியினர், திருமண மண்டபத்தில் இருந்து நேராக போராட்டக் களத்துக்கு வந்து, காளை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைக் குழந்தை, புதுமணத் தம்பதி என்பதோடு இந்த அறவழிப் போராட்டம் நின்றுவிடவில்லை. அதற்கும் மேல், நிறைமாத கர்ப்பிணி ஒருவர், 'தமிழுக்காக தமிழ் கருவும் போராடும்' என்ற பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி சமூக தளத்தில் பரவியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக மக்கள் இயக்கம் இப்படி ஒன்று திரண்டிருப்பது, தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிச்சயம் மாறும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive