மத்திய அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் தினத்தையும் கொண்டாட அனுமதிக்க
வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை
அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களாலும்
மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் முக்கியமான அறுவடை பண்டிகைதான்
பொங்கல் என்பது தங்களுக்குத் தெரியும். பொங்கல் பண்டிகையுடன் இணைந்து,
ஜல்லிக்கட்டு உட்பட பல்வேறு சமுதாய, புத்துணர்வு விளையாட்டுப் போட்டிகளும்
நடத்தப்படுவது உண்டு. இந்தப் பண்டிகை 3 அல்லது 4 நாள்கள் வரை நீடிக்கும்.
தமிழக அரசைப் பொருத்தவரை, இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதியிலிருந்து 16 ஆம்
தேதி வரை (திங்கள்கிழமை) விடுமுறை தினங்களாகும். உழவர் திருநாள் என்பதற்காக
இந்த நாள்களில் அரசு விடுமுறை அளிக்கிறது.
தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளில் எப்போதுமே பொங்கல் தினம் வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சனிக்கிழமை பொங்கல் தினம்
கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தின விழா: இந்த நிலையில், மத்திய அரசின் 12 விருப்ப விடுமுறை
தினப் பட்டியலில் தெரிவு செய்யக்கூடிய 3 விடுமுறை தினத்தில் கூடுதலாக தசரா,
பொங்கல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் திருவள்ளுவர்
தினத்தையும் மத்திய அரசு பணியாளர்கள் நலன் ஒருங்கிணைப்புக் குழு விடுமுறை
தினமாக அறிவிக்க முடியும். அதன்படி, பொங்கல் தொடர்புடைய அனைத்து
விழாக்களையும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களும் கொண்டாட வழி
வகுக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...