மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாசே இலவச தொழிற்பயிற்சி மையம்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது:
நாசே தொண்டு நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சியை அளித்து, அவர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 106 தொழிற் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவுத் தலைவர் கு.செல்வபெருந்தகை உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...