குற்றச்சாட்டுகளை மறுத்த வாட்ஸ் ஆப்!
தற்போது மனுதாரர் ஒருவர் வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் பற்றி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் வாட்சப் மற்றும் ஃபேஸ்புக்கை சுமார் 150 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பரிமாற்றம் செய்யும் தகவல்களுக்கு சரியான பாதுகாப்பில்லாமல் உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற தகவல்களை பொதுவாக பரிமாறிக்கொள்ளும் ஆப்களை ‘பப்ளிக் யுடிலிட்டி சர்வீஸ்’ என்றே அறிவிக்க வேண்டும். மேலும் இதன் தகவல் பாதுகாப்புக்காக அரசே அதைக் கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இன்று மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த இரண்டு வார காலங்களுக்குள் இதற்கான பதிலை வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டது.
இதுபோல், கடந்த 2016 அக்டோபர் மாதம் வாட்சப் நிறுவனத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பில் வாட்சப் அப்ளிகேசனை டெலிட் செய்தவர்களின் தகவல்களை வாட்சப் நிறுவனம் வைத்திருக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் வாட்சப் பயன்படுத்தும் நபர்களின் தகவல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...