வறுமைக்கோடு பற்றி வரையறை செய்வதற்காக, விரைவில் கமிட்டி ஒன்றை அமைக்க, 'நிடி ஆயோக்' முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்த, சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, 2009ல் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தற்போது, வறுமைக்கோட்டிற்கு கீழ்
உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன்படி, நகரங்களில், நாள் ஒன்றுக்கு, தங்கள் சொந்த உணவு உள்ளிட்ட தேவைக்கு, 33.33 ரூபாய்க்கும், கிராமப் புறங்களில், 27.20 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்பவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும், என பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை உரிய முறையில் வரையறை செய்யும் வகையில், புதிய கமிட்டி ஒன்றை ஏற்படுத்த, மத்திய அரசுக்கு ஆலோசனை கூறி வரும் அமைப்பான, 'நிடி ஆயோக்' முடிவு செய்துள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...