மூச்சு
விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த
சளி வருவது, நீண்ட நாள்
தொடர் இருமல் ஆகியவை, இந்நோயின்
அறிகுறிகள்.
புகை பழக்கத்தை கைவிடுவது,
சுகாதாரமான சூழ்நிலையில் வசிப்பது போன்ற நடவடிக்கைகளால், நுரையீரல்
புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயை குணப்படுத்திவிடலாம் என, மருத்துவர்கள் திரும்ப
திரும்ப சொன்னாலும், இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளன.
வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு ஆண்களும், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்
புற்றுநோய்க்கு, பெண்களும், அதிகம் ஆளாவதாக, புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்நோய்களுக்கான அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறிவது அவசியமாகிறது.
* வாய்ப்
புற்றுநோய்: சென்னையில் மட்டும், ஒரு லட்சம் பேருக்கு,
7 பேர், வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
காரணங்கள்:
புகை மற்றும் மது பழக்கம்,
பான், பான் மசாலா போன்ற
சுவைக்கும் வகை புகையிலை பொருட்களை
உட்கொள்வது, கூர்மையான பற்கள், ரத்த சோகை.
அறிகுறிகள்:
நாக்கில் வெள்ளை அல்லது சிவப்பு
நிறத்தில் ஏற்படும் படிமம், நாக்கு அல்லது
வாயில் ஏற்படும் ஆறாத புண், இருமலின்
போது ரத்தம் வருதல், குரலில்
திடீரென ஏற்படும் மாற்றம், உணவு விழுங்குவதில் உண்டாகும்
சிரமம்.
தடுக்கும்
வழிமுறைகள்: மது, புகை பழக்கத்தை
கைவிடுவது, ரத்த சோகைக்கு உடனடி
சிகிச்சை, கூரான பற்களை சரிசெய்வது,
வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது.
* நுரையீரல்
புற்றுநோய்: சென்னையில் ஒரு லட்சம் ஆண்களில்,
8 பேர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவீதம் பேருக்கு, புகைபிடிப்பதால்,
இந்நோய் வருகிறது.
காரணங்கள்:
பீடி, சிகரெட் போன்ற புகைக்கும்
வகை புகையிலை பொருட்களை பயன்படுத்துவது, சுகாதாரமற்ற சூழலில் வசிப்பது ஆகியவை,
நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணம்.
அறிகுறிகள்:
மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த
சளி வருவது, நீண்ட நாள்
தொடர் இருமல் ஆகியவை, இந்நோயின்
அறிகுறிகள்.
தடுக்கும்
வழிமுறைகள்: புகை பழக்கத்தை கைவிடுவது,
சுகாதாரமான சூழ்நிலையில் வசிப்பது போன்ற நடவடிக்கைகளால், நுரையீரல்
புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
* கர்ப்பப்பை
வாய் புற்றுநோய்: சென்னையில் வசிக்கும் பெண்களில், 30 பேரில் ஒருவர், அவர்களின்
வாழ்நாளில், இந்நோய்க்கு ஆளாகின்றனர்.
காரணங்கள்:
இளம் வயது திருமணம், முறையற்ற
உடலுறவு, கர்ப்பப்பை, பிறப்புறுப்பு சுத்தமின்மை, இளம் வயதில் குழந்தைபேறு,
அதிக குழந்தை பெற்றுக் கொள்வது.
அறிகுறிகள்:
ரத்தத்துடன் கலந்த வெள்ளைப்படுதல், உடலுறவுக்குப்
பின் ஏற்படும் ரத்தப் போக்கு, மாதவிடாய்
இல்லாத நேரங்களில், திடீரென ரத்தப்போக்கு ஏற்படுவது.
தடுக்கும்
வழிமுறைகள்: உள் உறுப்புகளை எப்போதும்
சுத்தமாக வைத்துக் கொள்வது, பேறு காலத்திலும், அதற்கு
பின்பும், தகுந்த உடல் பராமரிப்பை
மேற்கொள்வது, மாதவிடாயின்போது, சுத்தமான துணிகளை பயன்படுத்துவது, 35 வயதிற்கு
மேற்பட்ட பெண்கள், கர்ப்பப்பை புற்றுநோயை உறுதி செய்யும், "பேப்
ஸ்மியர்' பரிசோதனையை தவறாமல் செய்து கொள்வது.
* மார்பக
புற்றுநோய்: சென்னையில் வசிக்கும் பெண்களில், 35 பேரில் ஒருவர், இந்நோயால்
பாதிக்கப்படுகின்றனர்.
காரணங்கள்:
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை
உட்கொள்வது, சிறு வயதில் பருவமடைவது,
தாமதமாக குழந்தை பெறுவது, மலட்டுத்
தன்மை, மாதவிடாய் நிற்பதில் ஏற்படும் தாமதம் போன்றவை, மார்பக
புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்கள்.
அறிகுறிகள்:
மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில்
நெரிக்கட்டி வருவது, மார்பக அமைப்பில்
ஏற்படும் மாற்றம், மார்பக காம்புகளில் உண்டாகும்
ரத்தக்கசிவு, மார்பக காம்புகள் உள்ளிழுத்துக்
கொள்ளுதல், மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம்
ஆகியவை, இந்நோயின் அறிகுறிகள்.
தடுக்கும்
வழிமுறைகள்: கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை
தவிர்ப்பது, உடல் எடையை சரியாக
பராமரிப்பது, மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, ஆண்டிற்கு ஒருமுறை, மார்பக எக்ஸ்ரே (மேமோகிராபி)
பரிசோதனை மேற்கொள்வது போன்றவற்றின் மூலம், மார்பக புற்றுநோயை
தடுக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...