*நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல
மருத்துவரான செந்தில்குமரனிடம் பேசினோம். "இந்தச் செய்தியில் துளியும்
உண்மை இல்லை.* வாட்ஸ்அப் மூலமாக ஒரு கருத்து திட்டமிட்டுப்
பரப்பப்பட்டுவருகிறது. அந்தத் தகவலை யாரும் ஃபார்வர்டு செய்ய வேண்டாம். அது
ஒரு தவறான தகவல். அந்த ஊசி பாதுகாப்பானது. அந்தத் தடுப்பு ஊசியின் மூலம்
மீசில்ஸ் மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம். நான்
இந்த ஊசியை கடந்த 12 வருடங்களாக
குழந்தைகளுக்குப் போட்டுவருகிறேன். என்னிடம் இந்தத்
தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்ட குழந்தைகளின் பெற்றோர் யாரும் இது வரை
பிரச்னை என வந்ததில்லை.
மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் பல இடங்களில் குழந்தைகளின் உயிரிழந்ததை மறந்துவிடக் கூடாது. அதன் பின்னரே தமிழக அரசு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியது. முதல் டோஸ், 10 மாதக் குழந்தைக்கு போடப்படுகிறது. இரண்டாவது டோஸ் ஒன்றரை வயது குழந்தைக்கு போட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழகத்தின் எந்த இடத்திலும் மீசில்ஸ் இல்லை. கடந்த இரு வருடங்களாக நான் இந்த நோய் அறிகுறி இருப்பதாகவோ அப்படிப்பட்ட குழந்தைகளையோ பார்த்தது இல்லை. அதனால் இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட தவறான வதந்தியை யாரும் பிறருக்குப் பகிரவும் வேண்டாம்'' என்கிறார் செந்தில்வேலன்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்... ''ரூபெல்லாவுக்கு எதிரான தடுப்பு ஊசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. அதுதான் தற்போது இலவசமாக அரசு சார்பில் `எம்.ஆர்' எனப் போடப்படுகிறது. அரசு மருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் என்ற முறையில் நாங்கள் இந்தத் தடுப்பு ஊசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம். ஆனால் எளிதில் தவறான கருத்தை வாட்ஸ்அப் மூலமாகப் பரப்பி மக்களை குழப்பம் அடையச் செய்துவிடுகிறார்கள்.
தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும், இது, தேசிய தடுப்பு ஊசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. வீண் புரளிகளை நம்ப வேண்டாம் தடுப்பு ஊசிகள் கொடும் நோய்களுக்கு எதிராகச் செயல்படுபவை; பாதுகாப்பானவை. உங்கள் குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் மீசில்ஸ் - ரூபெல்லா நோய்க்கு எதிரான தடுப்பூசி கிடைத்துவிட்டதா என்பதை உறுதிசெய்யுங்கள்" என்கிறார்கள் அரசு அதிகாரிகள். வதந்தியை நம்புவதா... அரசு சொல்வதை நம்புவதா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... குழந்தைகளைக் காக்கும் தடுப்பூசிகள் விஷயத்தில்கூடவா இப்படியான கருத்துக்களும் எதிர்க்கருத்துக்களும் வர வேண்டும்?

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...