உயர் மதிப்பிலான ரூபாய்நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகுபணத்தட்டுப்பாடு உருவானதால்மக்கள் வேறு வழியின்றி கார்டு,
ஆன்லைன் போன்ற டிஜிட்டல்பரிவர்த்தனைக்கு மாறினர்.
இதற்காக சமீபத்தில் கூடஸ்மார்ட் போன்களுக்காக 'பீம்' என்ற புதிய செயலியை மத்தியஅரசு அறிமுகம் செய்தது.
இந்நிலையில், ஆதார் எண்அடிப்படையில் அனைத்துபரிவர்த்தனைகளையும்செயல்படுத்த மத்திய அரசுஉத்தேசித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் நேற்றுகூறியதாவது.
ஆதார் அடிப்படையில் பணம்செலுத்தும் முறை விரைவில்அறிமுகம் செய்யப்படஇருக்கிறது.
இதன்படி, வணிகர்களிடம்பொருட்கள் வாங்கிவிட்டு பணம்செலுத்த மொபைல் போன் கூடஎடுத்துச்செல்ல வேண்டாம்.
தங்களது ஆதார் எண்ணைகூறினால் போதும். பயோமெட்ரிக் முறையில் பணத்தைசெலுத்திவிடலாம்.
தற்போது ஆதார் பேமன்ட்முறையில் 14 வங்கிகள்இணைந்துள்ளன.
இந்த சேவைகள் விரைவில்வழங்கப்பட இருக்கிறது.
பிற வங்கிகளிடமும் இந்ததிட்டத்தில் இணைவதுதொடர்பாக பேசி வருகிறோம்.
பீம் ஆப், யுபிஐ ஆகியவையும்ஆதார் அடிப்படையில்இயங்குவதுதான்.
நாடு முழுவதும் 111 கோடி பேர்ஆதார் எண் பெற்றுள்ளனர். 49 கோடி வங்கி கணக்குகளுடன்ஆதார் எண்இணைக்கப்பட்டுள்ளது.
மாதத்துக்கு 2 கோடிகணக்குகளில் ஆதார் எண்சேர்க்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆதார்அடிப்படையிலானபரிவர்த்தனை வெகு விரைவில்செயல்படுத்தப்படும்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...