பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கும் நடைமுறை மீண்டும் வராது என
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. சமீப காலமாக
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகமாக உள்ளது. இதனால் டிசம்பருக்கு பின் அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பெட்ரோல், டீசலுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், ‘பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும், டீசல் விலை மீதான கட்டுப்பாடு 2014ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்திலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இவற்றின் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலை தொடரும். எண்ணெய் பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கும் நடைமுறை மீண்டும் வராது. இருப்பினும், பெட்ரோலிய பொருட்களின் விலை வரம்பைமீறி மிக அதிகமாக இருப்பின், அவற்றின் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்கும். இவற்றுக்கு மானியங்கள் வழங்குவதென்பது ஏழைகளின் விரோதச் செயல் ஆகும். தேவையானோருக்கு மட்டுமே மானியங்கள் வழங்கப்பட வேண்டும். விலை ஏற்றத்தை தாங்கக் கூடியோருக்கு, மானியங்கள் வழங்கப்படக்கூடாது’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...