பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் பிம்பம் உடைந்து
விட்டதாக ரிசர்வ் வங்கி யூனியனின் தரப்பில் கூறிப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் ஆர்.பி.ஐ.யின் மூன்று குழுமங்களை உள்ளடக்கியது. இதில் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பாக,
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மத்திய நிதி அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தேவையற்ற குறுக்கீடுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஊடகங்கள் மற்றும் பலதரப்பினராலும் ரிசர்வ் வங்கி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவது மன வேதனையளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை ஆர்.பி.ஐ-ல் பணி நியமனம் செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ-இன் செயல்பாடுகளில் அரசு குறுக்கிடுவது ஏற்றுக்கொள்ளத் தகாதது. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியமானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மோடியின் பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு ரிசர்வ் வங்கி பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அதை சமாளிக்க முடியாமல் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. பணமதிப்பழிப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டதா என முன்னாள் பிரதமரும் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பான புகார்களை மறுத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...