மாணவியருடன் பேசக் கூடாது, தாடி வளர்க்கக் கூடாது என்றும், தவறு
செய்பவர்களை தண்டிக்க,
தனியாக சித்ரவதை அறை அமைத்து, கொடுமைப்படுத்துவதாகவும், கேரள மாநிலத்தில் உள்ள, நேரு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் குமுறுகின்றனர்.
முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ள கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, நேரு இன்ஜினியரிங் கல்லுாரி. இந்த கல்லுாரி மாணவர் ஒருவர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லுாரி நிர்வாகத்தின் சித்ரவதையை தாங்க முடியாமலேயே, அந்த மாணவர் தற்கொலை செய்ததாக, சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லுாரியில் நடக்கும் சித்ரவதைகள் குறித்து, மாணவர்கள், பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:
சக மாணவியருடன் பேசினால், அவர்களுடன் சேர்ந்து கல்லுாரிக்கு வந்தால், மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. கல்லுாரிக்கு தாமதமாக வந்தால், அபராதம் விதிக்கப்படும். தாடி வளர்த்தால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தொட்டதற்கு எல்லாம் அபராதம், தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத்தை உடனடியாக செலுத்தாவிட்டால், தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. தண்டனை அளிப்பதற்காக, தனியாக ஒரு சித்ரவதை அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்களை, நிர்வாகத்தினரும், வெளியாட்களும் சேர்ந்து, அடித்து துன்புறுத்துகின்றனர். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...