சென்னையில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக்
கண்காட்சியில் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையிலான ஆய்வு நூல்கள்
விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 40-ஆவது புத்தக கண்காட்சி
தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான
பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 700 அரங்குகளை அமைத்துள்ளனர். இதில்
ஒவ்வொரு அரங்கிலும் பல விதமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்களை வாங்கவும் பார்க்கவும் பலர் வந்தவண்ணம் உள்ளனர்.
பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல தரப்பினரும் தங்களுக்கு விருப்பமான
புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
அறிவியல், உரைநடை, குழந்தைகளுக்கான
புத்தகங்கள், நாவல்கள், இலக்கிய நூல்கள் எனப் பலவகை நூல்கள் கண்காட்சியில்
பரவிக்கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பிரபலான ஆய்வு நிறுவனங்கள் தங்களது
ஆய்வு நூல்களை அரங்குகள் அமைத்து விற்று வருகின்றன.
மொழி, சமுதாயம், கல்வி, இலக்கியம் ஆகியவை
தொடர்பான ஆய்வுகளை நூல்களாக அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி
நூல்களை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம் வாங்கிச்
செல்கின்றனர்.
பிரபல ஆய்வு நிறுவனங்கள்: குறிப்பாக உலகத்
தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னைப்
பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை ஏராளமான ஆராய்ச்சி நூல்களை
கொண்டு வந்துள்ளன. இதுபோன்ற தமிழ் ஆய்வு நூல்கள் தவிர, ஆக்ஸ்போர்டு
யூனிவர்சிட்டி பிரஸ் போன்ற நிறுவனங்கள் ஆங்கில ஆய்வு நூல்களை வைத்துள்ளன.
அரசு சார்பில் தொடங்கப்பட்ட ஆய்வு
நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில பதிப்பகங்களும் ஏராளமான ஆய்வு நூல்களை
விற்பனைக்கு வைத்துள்ளன. அரசியல் ஆய்வுகள், சமூக ஆய்வுகள், ஒப்பாய்வுகள்,
வரலாற்று ஆய்வுகள் என பல தலைப்புகளில் நூல்கள் உள்ளன.
மேலும் வ.உ.சி. நூலகம், டாக்டர்
உ.வே.சாமிநாதய்யர் நூலகம் போன்றவையும் பல அரிய ஆராய்ச்சி நூல்களை
விற்பனைக்கு வைத்துள்ளன. மத ரீதியிலான ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்
அளிக்கும் வகையில் பல மதம் தொடர்பான ஆய்வு நூல்கள் குறிப்பிட்ட மதம்
சம்மந்தமான அரங்குகள் தவிர, பிற அரங்குகளிலும் உள்ளன.
முதலாளித்துவம், கம்யூனிஸம் சார்ந்த பொருளாதார ஆய்வு நூல்களும் ஏராளமாக இருக்கின்றன.
முதலாளித்துவம், கம்யூனிஸம் சார்ந்த பொருளாதார ஆய்வு நூல்களும் ஏராளமாக இருக்கின்றன.
பயன் பெற்ற ஆராய்ச்சியாளர்கள்: இவ்வாறு
புத்தகக் கண்காட்சியில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி நூல்கள்
ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பெரிதும் பயன்
அளித்து வருகின்றன.
அவற்றை ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமல்லாமல்,
பிற வாசகர்களும் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இலக்கியவாதிகள்,
கல்வியாளர்கள் மட்டுமல்லாமல், ஆராய்ச்சியாளர்களையும் இந்தாண்டு புத்தகக்
கண்காட்சி திருப்திபடுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...