தமிழகம்
உள்பட நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம்,
உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை மத்திய அரசு
உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அமல்: இந்தக் கட்டணங்களை கடந்த டிசம்பர் 29 -ஆம் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் கட்டண உயர்வு சனிக்கிழமை (ஜன.7) முதல் அமலுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு (அதாவது டிசம்பர் 29-ஆம் தேதி முதல்) வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களுக்கு நிலுவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய கட்டண விவரம் (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்...): எல்எல்ஆர் (வாகனம் கற்றுக் கொள்ளும் காலம்) உரிமம் -ரூ.150 (ரூ.30); இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் -ரூ.500 (ரூ.350); இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் -ரூ.200 (ரூ.50); தேசிய வாகன ஓட்டுநர் உரிமம் -ரூ.1,000 (ரூ.500); மாற்று ஓட்டுநர் உரிமம் -ரூ.5,000 (ரூ.2,500); ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனப் பதிவு -ரூ.1,000 (ரூ.300); ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பதிவுக் கட்டணம் -ரூ.10,000 (ரூ.2,500).தமிழகத்தில் உள்ள 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...