''பத்மஸ்ரீ
விருதை, என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்,'' என, பாரா ஒலிம்பிக்கில் தங்கம்
வென்ற மாரியப்பன் கூறினார்.பிரேசில் நாட்டின் ரியோவில் நடந்த பாரா
ஒலிம்பிக், உயரம் தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் தாண்டி, சேலம்
மாவட்டம், காடையாம்பட்டி, பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், தங்கம்
வென்றார்.
நேற்று காலை, ஊர் மக்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு, பெரியவடகம்பட்டிக்கு அடுத்த, முனியப்பன் கோவிலில், 'கிடா விருந்து' ஏற்பாடு செய்திருந்தார். பத்மஸ்ரீ விருது பெயர் பட்டியலை, மத்திய அரசு, நேற்று வெளியிட்டது.
இதில், தமிழக வீரர் மாரியப்பன் பெயர் அறிவிக்கப்பட்டதால், பெரியவடகம்பட்டி மக்கள், மாரியப்பனின் உறவினர்கள், நண்பர்கள், எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மாரியப்பனை தோளில் சுமந்து, நண்பர்கள் ஆரவாரம் செய்தனர்.மாரியப்பன் கூறியதாவது:பத்மஸ்ரீ விருதுக்கு, என்னை தேர்வு செய்தது, பயிற்சியாளர் சத்யநாராயணன் கூறியபின் தான் தெரியும். தற்போது, மிகுந்த மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இந்த விருதை, என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது, என் அடுத்த லட்சியம்.நம்மால் முடியாதது எதுவும் இல்லை. முயன்றால், எதையும் சாதிக்கலாம். அதற்கு, இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாரியப்பனின் தாய் சரோஜா கூறுகையில், ''என் மகனுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது; எனக்கும், உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி,'' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...