பள்ளி வேளை நாட்களில், வகுப்பறையை, 'கட்' அடித்து, ஊர்
சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதை பள்ளி
நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதால், கிராமவாசிகள் அதிருப்தி
அடைந்துள்ளனர். அய்யன்பேட்டை, நாயக்கன்பேட்டை, வாலாஜாபாத்,
ஈஞ்சம்பாக்கம், கோவிந்தவாடி, புள்ளலுார் உள்ளிட்ட பல கிராமங்களில், அரசு
பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி மாணவர்களில் சிலர், வகுப்பறை நேரங்களில், 'கட்'
அடித்து விட்டு மீன் பிடிக்கவும்; கரும்பு மற்றும் தென்னந்தோப்பிற்கு
சென்று வருவதும் அதிகரித்துள்ளது.இதை கண்காணிக்க வேண்டிய பள்ளி நிர்வாகம்
கண்டு கொள்ளாமல் இருப்பது, கிராமவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, வகுப்பறை நேரங்களில் தான்தோன்றித்தனமாக சுற்றித்திரியும் மாணவர்களை
கண்காணித்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...