தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின்
2௦11-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரின் தேர்தல் வரவு, செலவு
கணக்கை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2011–ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை, கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும், அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் போட்டியிட்டனர். இதில் மு.க. ஸ்டாலின் சைதை துரைசாமியைவிட, 2 ஆயிரத்து 734 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சைதை துரைசாமி தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், ‘தேர்தலின்போது துணை முதலமைச்சர் பொறுப்பில் மு.க.ஸ்டாலின் இருந்தார். அதனால், பண பலம், ஆள் பலம், அதிகார பலம் கொண்டு ஏராளமான முறைகேடுகள் செய்து, வெற்றிப் பெற்றுள்ளார். எனவே, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து வருகிறார். சைதை துரைசாமி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். எதிர் மனுதாரரான மு.க.ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலினின் தேர்தல் வரவு, செலவு கணக்கு தொடர்பான விவரங்களை வரும் 11-ஆம் தேதி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...