Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உணவு ஒவ்வாமை : 800 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிலருக்கும் கடல் சார்ந்த உணவுகள் உட்கொண்டால் உணவு ஒவ்வாமை ஏற்படும். சிலருக்கு குறிபிட்ட சில பொருட்கள்
உணவுகள் மூலம் ஒவ்வாமை ஏர்படும். உணவு ஒவ்வாமையால் அடிவயிற்று வலி, வயிறு உப்புதல், வாந்தி, வயிற்றுபோக்கு, சரும அரிப்பு, தோல் தடிப்பு போன்றவை ஏற்படும்.

இந்நிலையில், விசாகப்பட்டினம், கே கொடபாடு மண்டல் பகுதிக்கு உட்பட்ட 800 பேர் உணவு ஒவ்வாமைக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை இரவு மாரிவலசா என்னும் பகுதியில் நடைபெற்ற ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ விழாவில் கலந்துக் கொண்ட மக்கள், அங்கு உணவு சாப்பிடுள்ளனர். அதன் பின்னர் தான் அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் ஜே சரோஜினி தகவல் அளித்துள்ளார். பாதவலசா,கோதாபூமி, ஸ்ருஙாவனம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2000 பேர், ஞாயிற்றுகிழமை மதியம் கோகாடா கோவிந்தாவின் வீட்டில் சாப்பிட்டுள்ளனர். விழாவில் அசைவ உணவை சாப்பிட்ட 800 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 11 மணி அளவில், சில கிராம மக்களுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கபட்டவர்களில் சுமார் 500 பேர் பொது சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும்,300 பேர் கே கொடபாடு பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
3,000 ஐவி ஃப்ளூயிட்ஸ் மற்றும் மருந்துகளுடன் 5 மருத்துவர்களும், 15 துணை ஊழியர்களும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.திங்கட்கிழமையன்று கே கொடபாடு கிராமத்தை சேர்ந்த 30 பேர் மற்றும் மாரிவலசாவை சேர்ந்த 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.அன்று மதியம் வழங்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் பாக்கெட் மாதிரிகளை சேகரிக்குமாறு உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கேட்டுள்ளோம். அவர்கள் ஆய்வு செய்து தகவல் அளிப்பார்கள். பெரும்பாலான நோயாளிகளுக்கு வெளிநோயாளர் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சோடாவரம் சர்கிள் இன்ஸ்பெக்டர் பி முரளி, “ அறிக்கை மூன்று நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மாதம், ஆந்திரா பலியகுடா பழங்குடி குக்கிராமத்தில் உணவு ஒவ்வாமயால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive