மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1500 மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு 8 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...