சிரியாவைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி பானா அல்-அமெத் தன்னுடைய ட்விட்டர்
பக்கத்தில், சிரியாவின் அலெப்போவில் நிகழும் தாக்குதல்களையும்,
பொதுமக்களின் நிலைகுறித்தும் தொடர்ந்து பதிவிட்டு புகழ்பெற்ற சிறுமியாக
மாறியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்குதல்
தீவிரமடைய,
சிரியாவில் இருந்து துருக்கிக்கு இடம்பெயர்ந்த அச்சிறுமி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சிரியாவில் நடைபெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தானும் ஒருவர் என்றும், அலெப்போவில் இருந்த தங்களுடைய பள்ளி குண்டுவெடிப்பில் முற்றிலும் சேதமடைந்து, அதில் தனது நண்பர்கள் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சிரியாவில் போரினால் கடந்த 6 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 15,000 குழந்தைகளும் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய சிறுமி, அதனால் சிரிய குழந்தைகளுக்கு உதவி புரியுங்கள் என்றும் டொனால்ட் டிரம்பிடம் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கி சுதந்திரமாக இருக்கிறது என்றாலும் எங்கும் செல்ல மனமில்லை என்ற கருத்தையும் சேர்த்துள்ளார் அந்தச் சிறுமி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...