கடந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 77,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாடு முழுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி 8 துறைகளில் சுமர் 77,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைத் துறைகளில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு 1.28 லட்சமாக அதிகரித்துள்ளது. இத்துறைகளிலேயே அதிகபட்சமாக கல்வித்துறையில் 51,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் போக்குவர்த்து துறைகளில் வேலைவாய்ப்பு அளவு அதிகமாக இருந்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் - பி.பி.ஒ. துறையில் 16,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. அதேபோல, முந்தைய 2015ஆம் ஆண்டைக் காட்டிலும், கட்டுமானத் துறையில் 23,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. முன்னதாக உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையில், உற்பத்தி துறையில் 12,000 வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...