சிலி நாட்டில் 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சின்கோரோ இனத்தை சேர்ந்த
மக்களின் 15 மம்மிகளை அந்நாட்டின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் கி.மு. 10,000 முதல் 3,400 வரை வாழ்ந்த
இனமாகும். இந்த மக்கள் தென் அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலை ஒட்டி
வேட்டையாடியும் மீன் பிடித்தும் உயிர் வாழ்ந்துள்ளனர்.
காலப்போக்கில் அழிந்துபோன இந்த இனத்தின் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த உடலை எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் ஸ்கேன் செய்து ஆராய்ந்து வருகின்றனர். மேலும், உடல்களின் அனைத்து பாகங்களையும் புகைப்படம் எடுத்து ஆராய்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி DNA சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த இனத்தின் மக்கள் பற்றி 1903ஆம் ஆண்டுகளில் இருந்து ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது 15 உடல்கள் கிடைத்திருப்பது ஆராய்ச்சிக்கு உதவியாக அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...