சென்னையில்
கடந்த 39 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்
மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், 40-ஆவது ஆண்டு
புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 80 சதவீதம் தமிழ் புத்தக அரங்குகள்; 20 சதவீதம் ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழி புத்தக அரங்குகள் ஆகும்.
ஜனவரி 6 முதல் 19-ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும். விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டும் கருத்தரங்குகள், சிறப்புரைகள் உள்ளிட்டவையும் இடம்பெற உள்ளன. சிறுவர்களுக்கான போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடாக கண்காணிப்பு கேமராக்கள், தாற்காலிக காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...