திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில், பாரம்பரிய வேட்டியை
இளைஞர்கள் மனதில் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஜனவரி 1 முதல் 7ம் தேதி வரை
ராம்ராஜ் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது. இதை வெற்றி பெற செய்வதற்காக
ரூ.100க்கு வேட்டி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, ராம்ராஜ் காட்டன்
நிறுவனர் நாகராஜன், நிருபர்களிடம் கூறியதாவது: ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில்,
ஜன.1 முதல் 7ம் தேதி வரை, வேட்டி வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதன் முக்கிய
நோக்கமே நெசவாளர்களின் வாழ்க்கையை ஒரு படி மேலே கொண்டு செல்வது தான். இந்த
ஒரு வாரமும், 100 ரூபாய்க்கு வேட்டி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனிதனின் உயிரை காப்பது உணவு, மானம் காப்பது நெசவு என்பதை உணர்ந்து,
நெசவாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்கி உள்ளது ராம்ராஜ். வேட்டி
அணிவது நமது பண்பாட்டின் அடையாளம் மற்றும் கலாசார சின்னம் என்பதை இளைய
தலைமுறைக்கு உணர்த்தி, பாரம்பரிய வேட்டியை இளைஞர்கள் மனதில் கொண்டு
சேர்ப்பதற்காக இந்த வேட்டி வாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத ராம்ராஜ் நிறுவனம், வேட்டி வார
கொண்டாட்டத்தில் பொதுமக்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக,
விற்பனை விலையில் சமரசம் செய்து கொண்டுள்ளது.தரமான வேட்டிகள் குறைந்த
விலையில் இந்த வாரம் முழுவதும் மக்களுக்கு கிடைக்க செய்வதே வேட்டி
வாரத்தின் நோக்கம்.
ராம்ராஜ் நிறுவனத்தின் அனைத்து டீலர்களிடமும், ஷோரூம்களிலும், 100 ரூபாய்
வேட்டிகள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக் கைகளையும் ராம் ராஜ் நிறுவனம்
மேற்கொண்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி நூற்றாண்டுகள்
கடந்த நமது கலாசாரம் வளர துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...