கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி ஏழைகளுக்கு வீட்டுக் கடன் மானியம் வங்கிச் சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.
ஏழைகளுக்கு மானியத்துடன்கூடிய வீட்டுக்கடன் வழங்கப்படும்.
கர்ப் பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர்
நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
வரிஏய்ப்பாளர்கள், கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
வரிஏய்ப்பாளர்கள், கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
காலாவதியான அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட்
செய்வதற்கான காலக் கெடு கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில்,
புத்தாண்டை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரை
யாற்றினார். அப்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அவர் விளக்கம்
அளித்தார். பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்தார். அவர் கூறியதாவது:
ஊழல், கறுப்புப் பணம் ஆகிய வற்றால் நாட்டு மக்கள் சிறைபட்டுக்
கிடக்கின்றனர். ஊழலுக்கு முன்பு நேர்மையானவர்கள் மண்டியிடும் அவலநிலை
உள்ளது. ஊழலின் பிடியில் இருந்து விடுதலை பெறவே நாட்டு மக்கள் அனைவரும்
விரும்புகின்றனர். அதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த 50 நாட்களும் மக்கள் எதிர் கொண்ட துன்பங்கள், சிரமங்களை என்னால்
புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் வங்கிகளில் நீண்ட நேரம்
காத்திருந்ததையும் அரசு அதிகாரிகளுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும்
அறிவேன். எனினும் நாட்டின் நலன் கருதி அனைத்து சிரமங்களையும் மக்கள்
ஏற்றுக்கொண்டனர்.
நமது நாட்டில் பணப் பரிவர்த் தனையே பிரதானமாக இருந்தது.
இதன்காரணமாக கறுப்புப் பணம் பதுக்கப்பட்டது. கள்ளநோட்டுகள் புழக்கத்தில்
விடப்பட்டன. இதை தடுக்கவே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை
விதிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்க மக்களோடு இணைந்து மத்திய அரசு ஒரு போரை
தொடுத்துள்ளது. இதன்மூலம் நாட்டை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. இதில் பிடிபடும் வரிஏய்ப்பாளர்கள், கறுப்புப் பண
பதுக்கல்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருமான வரித்துறை
புள்ளிவி வரத்தில், நாடு முழுவதும் 24 லட்சம் பேர் மட்டுமே ஆண்டுக்கு ரூ.10
லட்சத்துக்கு மேல் வரு மானம் ஈட்டுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
ஒவ்வொரு நகரங்களிலும் கார், பங்களா உள்ளிட்ட சகல வசதிகளுடன்
பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் வருமானத்தை மறைத்து
வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் விவகாரத்தில் சட்டம் தனது
கடமையை செய்யும். வங்கிச் சேவை சீரடையும் கறுப்புப் பணம், கள்ள நோட்டு கள்
தீவிரவாதிகளுக்கு பக்க பல மாக இருந்தன. பணமதிப்பு நீக்க நட வடிக்கையால்
தீவிரவாதத்தின் முது கெலும்பு முறிக் கப் பட்டுள்ளது.
இளைஞர்கள் தீவிரவாத பாதையில் இருந்து விலகி வருகின்றனர்.
நாடு முழு வதும் வங்கிச் சேவைகள் விரை வில் இயல்பு நிலைக்கு திரும்ப
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கித் துறைக்கு இது பொற் காலம்.
ஏழைகள், நடுத்தர வர்க்க மக்களின் நலனுக்காக வங்கிகள் சேவையாற்ற வேண்டும்.
கிராம மக்கள், ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பெண்கள் முன்னேறி னால் நமது
நாடும் முன்னேறும். மானிய வீட்டுக் கடன் பெரும்பாலான ஏழைகளுக்கு வீடு
இல்லை. நடுத்தர வர்க்கத்தின ருக்குகூட வீடு என்பது எட்டாத கனவாக உள்ளது.
அவர்களின் நலன் கருதி பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 2 புதிய
திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டங்களில் மானியத் துடன்கூடிய வீட்டுக் கடன்
வழங்கப் படும்.9 லட்சம் வரையிலான வீட்டுக் கடனில் 4 சதவீதம் வட்டி மானியம்
வழங்கப்படும். 12 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீத வட்டி மானியமும்
20 லட்சம் வரையிலான கடனுக்கு 2 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும். ரபி
பருவத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் கடன்களுக்கு 60
நாட்களுக்கு வட்டி ரத்து செய்யப்படும்.
அடுத்த 3 மாதங்களில் 3 கோடி விவசாய கிரெடிட் கார்டுகள் ரூபே
கார்டுகளாக மாற்றப்படும். இந்த கார்டுகளை விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும்
பயன்படுத்திக் கொள்ள முடியும். குறு, சிறு தொழில்களை மேம் படுத்துவதற்காக
அந்தத் துறையின ருக்கு வழங்கப்படும் ரூ.1 கோடி கடன் தொகை ரூ.2 கோடியாக
உயர்த்தப்படும். சிறு வர்த்தகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்காக
அவர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். கர்ப்பிணிகளின் நலன் கருதி
விரைவில் புதிய திட்டம் தொடங்கப் படும்.
அதன்படி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்தான உணவு, தடுப்பு
மருந்துகளுக்காக அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 டெபாசிட்
செய்யப்படும். மூத்த குடிமக்களின் ரூ.7.5 லட்சம் வரையிலான டெபாசிட்
தொகைக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...