அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 5ம் தேதி, புதிய வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், 2016 அக்டோபரில், வாக்காளர்
பட்டியல் திருத்தப் பணி நடந்தது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க,
திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொதுமக்கள்
வசதிக்காக, சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
முகாம்களில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன; முறையாக பரிசீலிக்கப்பட்டன. களப் பணியாளர்கள், வீடு வீடாக சென்று, விண்ணப்பத்தில் உள்ள தகவல் உண்மையா என, ஆய்வு செய்தனர்.
ஆய்வு அடிப்படையில், புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய பட்டியல், 5ல், சட்டசபை தொகுதி வாரியாக வெளியிடப்பட உள்ளது. புதிதாக, 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்; 3.34 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. புதிய வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில், 5.93 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...