அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் பணியில் தமிழகத்தின் இருளர் பழங்குடியினரை சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
45 நாட்கள் அங்கு பாம்பு பிடிக்கும் இவர்களுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*பாம்பு பிடிக்க..*
அமெரி்ககாவின் புளோரிடா மாகாணத்தில், பர்மிய மலைப்பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்த காரணத்தால் மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக புளோரிடா வனவிலங்குப் பாதுகாப்புக் குழு, பாம்பு பிடிப்பதில் திறமைசாளிகளான தமிழகத்தின் மலைவாழ் இருளர் இனத்தை சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபால் என்ற இருவரை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளது.
*50 லட்சம் சம்பளம்:*
இவர்கள் இருவரும் பாம்புகளை பிடிப்பதுடன், அக்குழுவுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சியும் அளித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் 13 மலைப் பாம்புகளை பிடித்துள்ள இவர்கள், பிப்., மாதம் முழுவதும் அங்கு பணியாற்ற உள்ளனர். பாம்பு பிடிக்கும் பணிக்காக இவர்கள் இருவருக்கும் 45 நாட்களுக்கு சுமார் ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதில், இரு மொழிப்பெயர்ப்பாளர்கள், பயணச் செலவும் அடக்கம்.
Great. Skilled people will be appreciated at anywhere
ReplyDeleteGreat. Skilled people will be appreciated at anywhere
ReplyDelete