5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக,
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள், ஒரு வாரம் தாமதமாக, மார்ச் 9–ந்தேதி தொடங்குகின்றன.5 மாநில தேர்தல்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள், மார்ச் முதல் வாரம் தொடங்குவது வழக்கம்.இந்நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல்கள்,
பிப்ரவரி 4–ந்தேதி தொடங்கி, மார்ச் 8–ந்தேதி முடிவடைகின்றன.சி.பி.எஸ்.இ. தேர்வுகள், அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுபவை என்பதால், திட்டமிட்டபடி தொடங்கினால், மேற்கண்ட மாநிலங்களில் தேர்வுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதப்பட்டது.ஒரு வாரம் தாமதம்
பிப்ரவரி 4–ந்தேதி தொடங்கி, மார்ச் 8–ந்தேதி முடிவடைகின்றன.சி.பி.எஸ்.இ. தேர்வுகள், அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுபவை என்பதால், திட்டமிட்டபடி தொடங்கினால், மேற்கண்ட மாநிலங்களில் தேர்வுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதப்பட்டது.ஒரு வாரம் தாமதம்
எனவே, 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இந்த தேர்வுகள் மார்ச் 9–ந்தேதி தொடங்கும் என்று நேற்று அறிவித்தது. இதன்மூலம், ஒரு வாரம் தாமதமாக இத்தேர்வுகள் தொடங்குகின்றன.இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–சூழ்நிலைகளை கவனமாக ஆராய்ந்த பிறகுதான், தேர்வுகளை ஒரு வாரம் தாமதமாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதற்கு கூடுதல் கால அவகாசம் கிடைப்பதுடன், எவ்வித இடையூறும் இன்றி, தொடர்ச்சியாக தேர்வுகளை எழுதலாம்.உரிய நேரத்தில் முடிவுகள்
மேலும், முக்கிய பாடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். என்ஜினீயரிங் பொது நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.), மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (நீட்) ஆகியவற்றுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, அந்த நுழைவுத்தேர்வுகளுக்கு முன்பே, சி.பி.எஸ்.இ. தேர்வுகள் முடிவடைவதை உறுதி செய்துள்ளோம்.அத்துடன், உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்காக பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.எண்ணிக்கை
சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு தேர்வுகளை 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவர்களும், 12–ம் வகுப்பு தேர்வுகளை 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவர்களும் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.10–ம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரல் 10–ந் தேதியும், 12–ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 29–ந்தேதியும் முடிவடைகின்றன. 10–ம் வகுப்பு தேர்வுகள், 3 ஆயிரத்து 974 மையங்களிலும், 12–ம் வகுப்பு தேர்வுகள் 3 ஆயிரத்து 503 மையங்களிலும் நடைபெறுகின்றன.தமிழ்நாட்டை பொறுத்தவரை 15 ஆயிரத்து 450 பேர் 12–ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். 10–வது வகுப்பு தேர்வை 40 ஆயிரத்து 300 பேர் எழுதுகிறார்கள்.சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு மற்றும் 12–வது வகுப்பு தேர்வு கால அட்டவணை விவரம் வருமாறு:–10–வது வகுப்பு தேர்வு
மார்ச் 9–ந்தேதி –தகவல் தொழில்நுட்பம்.10–ந்தேதி – தமிழ், இந்தி15–ந்தேதி –தெலுங்கு, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிப்பாடங்கள்.20–ந்தேதி –பெயிண்டிங்22–ந்தேதி –அறிவியல்27–ந்தேதி –மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழித்தேர்வுகள்.30–ந்தேதி –கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்.ஏப்ரல் 3–ந்தேதி –கணிதம்.5–ந்தேதி – அடிப்படை தகவல் தொழில்நுட்பம்.8–ந்தேதி – சமூக அறிவியல்.10–ந்தேதி –மனை அறிவியல்.12–வது வகுப்பு தேர்வு
மார்ச் 9–ந்தேதி – ஆங்கில விருப்பபாடம்.15–ந்தேதி –இயற்பியல்.16–ந்தேதி –வர்த்தக கல்வி.18–ந்தேதி –தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழித்தேர்வுகள்.20–ந்தேதி –கணிதம், மைக்ரோபயாலஜி.21–ந்தேதி –வேளாண்மை.23–ந்தேதி –வரலாறு.25–ந்தேதி –வேதியியல்.27–ந்தேதி –கம்ப்யூட்டர் சயின்ஸ்.29–ந்தேதி –கணக்கு பதிவியல்.31–ந்தேதி– பொறியியல் கிராபிக்ஸ், மெக்கானிக்கல் பொறியியல்.ஏப்ரல் 3–ந்தேதி அரசியல் அறிவியல் 5–ந்தேதி –உயிரியல்.6–ந்தேதி –புவியியல், பயோ டெக்னாலஜி.10–ந்தேதி –உடற்கல்வி.12–ந்தேதி –சமூகவியல்.17–ந்தேதி –பொருளாதாரம்.18–ந்தேதி –மனை அறிவியல்.19–ந்தேதி –பெயிண்டிங்24–ந்தேதி –உளவியல்.29–ந்தேதி –தத்துவவிய.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...