பிஎஸ்என்எல், ஐடியா, ஜியோவின் அதிரடியைத் தொடர்ந்து வோடாபோன் அதன் பங்கிற்கு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
மும்பை:
வோடபோன் நிறுவனத்தின் ரெட் போஸ்ட்பெயிட் (RED post-paid) திட்டங்களின் படி
வாடிக்கையாளர்களுக்கு 3 மடங்கு டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும்
வெளியூர் அழைப்புகளை வோடபோன் வழங்குகின்றது. ஜியோ நிறுவனம், கடந்த சில
மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தியது. இலவச
சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி
அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல்,
பிஎஸ்என்எல், ஐடியா நிறுவனங்களும் அதன் பங்கிற்கு சலுகைகளை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து வோடாபோனும் அதன் பங்கிற்கு ஒரு சூப்பர் சலுகையை களமிறக்கியுள்ளது. இத்திட்டங்களின் துவக்க விலை ரூ.499 ஆகும். வோடபோன் ரெட் பிளான் சலுகையில் ரூ.499 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச தேசிய ரோமிங், 100 உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 3ஜிபி டேட்டாவும், 4ஜி ஸ்மார்ட்போன் இல்லாதோருக்கு 1ஜிபி டேட்டாவும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் ரெட் பிளானில் ரூ.699 ன் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு 5ஜிபி டேட்டாவும் 4ஜி ஸ்மார்ட்போன் இல்லாதோருக்கு 2.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அன்லிமிட்டெட் காலிங் வசதி, மற்றும் இலவச தேசிய ரோமிங் மற்றும் 100 உள்ளூர் தேசிய எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இப்படியாக வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்கள் ரூ.999/-, ரூ.1,299/-, ரூ.1,699/- மற்றும் ரூ.1,999/- என்ற ரீசார்ஜ்களில் கிடைக்கின்றன வோடபோன் ரெட் ரூ.1999 திட்டத்தின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 24 ஜிபி டேட்டாவும் 4ஜி டேட்டா இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகின்றது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தேசிய ரோமிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...