எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.17) தமிழகத்தில் உள்ள
தேசிய வங்கிகள் அனைத்துக்கும் பொது விடுமுறையாகும் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர். செலாவணி முறிச்சட்டம் 1881-இன்
கீழ், வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.17)
பொது விடுமுறை நாளாக தமிழக அரசு
அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது சனிக்கிழமை (ஜன.14), ஞாயிற்றுக்கிழமை (ஜன.15)
ஆகிய இரு நாள்கள் வங்கிகளுக்கு
வார விடுமுறை தினங்களாகும். இதைத்தொடர்ந்து, உழவர் திருநாள் (ஜன.16),
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
நூற்றாண்டு விழா (ஜன.17) என,
திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும்
விடுமுறையாக உள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும்
தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறையாக
அமைந்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...