வேலூர்
விஐடியில் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மையில் முன்னேற்றங்கள் குறித்த
சர்வதேச 4 நாள் மாநாட்டில், ஆராய்ச்சிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க
வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மையில் முன்னேற்றங்கள் தொடர்பாக திங்கள்கிழமை தொடங்கிய நான்கு நாள் சர்வதேச மாநாட்டுக்கு தலைமை வகித்த விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
உலகமயமாக்கலால் மாணவர்கள் எந்த நாட்டிலும் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக் கல்விக்காக ஆண்டுக்கு நூறு முதல் இருநூறு கோடி டாலர் அளவிற்கு செலவிடுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...