இந்தியாவில் 550க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 41,000 பெட்ரோல் நிலையங்களில்
பேடிஎம் நிறுவனம் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க பேடிஎம் செயலி மூலமாக சேவை வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் தங்களுடைய
வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிவிட்டு அதற்கான தொகையை பேடிஎம் செயலி மூலம் சுலபமாக செலுத்திவிடலாம். இதன்மூலம் கூடுதல் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க முடியும் என்பதோடு, சில்லறை மாற்றும் பிரச்னையும் இருக்காது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அனைத்துவிதமான பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. எனவே ஆயில் நிறுவனங்களும் இந்த பேடிஎம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு அதிக வரவேற்பு அளித்துவருகின்றன. தற்போதைய நிலையில் நாட்டின் 70 சதவிகித பெட்ரோல் நிலையங்களில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை முறை நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து பேடிஎம் நிறுவன மூத்த துணைத் தலைவரான கிரண் கூறுகையில், ‘நாங்கள் இதுவரை 550க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 41,000 பெட்ரோல் நிலையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறையை செயல்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம் வாகன ஓட்டிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். இந்த பேடிஎம் செயலி தற்போது 1௦ மொழிகளில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...