ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 40 போலி பீம்
செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த
நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது
என்ற பார்த பிரதமரின் அறிவிப்புக்கு பின்னர் பொதுமக்கள் அனைவரும் டிஜிட்டல்
பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர்
நரேந்திர மோடி அனைத்து இந்திய மக்களும் மொபைல் மூலம் பணப் பரிவர்த்தனை
செய்வதற்கு வசதியாக பீம் என்ற செயலியை அறிமுகம் செய்தார். Bharat Interface
of Money என்பதன் சுருக்கமான இந்த BHIM செயலியை இதுவரை 3 மில்லியன்
பேர்களூக்கும் அதிகமானோர் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து
பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
'இதெல்லாம்' இந்தியாவில் 2017-ஆம்
ஆண்டிலாவது நிகழுமா.!? தற்போது வங்கியிலும் ஏடிஎம்களிலும் பணம்
பற்றாக்குறையாக உள்ள நிலையில் இந்த செயலி பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றது. ஆனால் அதே நேரத்தில் இந்த
செயலி மிக வேகமாக டவுன்லோடு செய்யப்படுவதால் இந்த பீம் செயலியை போலவே போலி
செயலிகளை ஒருசிலர் தயார் செய்து கூகுள் ப்ளே ஸ்டோரில் உலவ விட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...