மத்திய அஞ்சல்துறை ஊழியர்க ளுக்கு பொங்கல் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளதால்,
தமிழகத் தில் 40 ஆயிரம் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண் டாட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். மத்திய அரசு 2017-ம் ஆண்டில் 17 நாள் விடுமுறை அறிவித் துள்ளது.
மத்திய அரசை பொறுத்தவரை ஜன. 26 (குடியரசு தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக். 2 (காந்தி ஜெயந்தி) ஆகியன நிரந்தர விடுமுறை நாளாகும். மற்ற விடுமுறை நாட்களை மத்திய அரசு அதி காரிகள் குழு முடிவு செய்து அறிவிக்கும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 17 நாள் விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை தினமான ஜன.14 இடம் பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளித்துவிட்டு இந்த ஆண்டு இல்லை என மறுத்து விட்டனர். ஜனவரி மாதத்தில் குடியரசு தினமான ஜன.26-ம் தேதி மட்டும் விடுமுறையாக அறி விக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளைப் பொறுத்தவரை அஞ்சல்துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறையிலும் வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை நாள். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாளாகும். அஞ்சல் துறையில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாளும் வேலை நாளாகும். அஞ்சல்துறை தவிர்த்து பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை ஜன.14 வழக்கமான விடுமுறை நாளான சனிக்கிழமை வருவதால் பாதிப்பு எதுவும் இல்லை. அஞ்சல்துறை ஊழியர்களுக்கு ஜன.14 சனிக்கிழமை வேலை நாளாகும். அன்று விடுமுறை மறுக்கப்பட்டுள்ளதால் தமிழ கத்தில் 40 ஆயிரம் அஞ்சல் துறை ஊழியர்கள் பொங்கல் பண்டி கையை கொண்டாட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தேசிய அஞ்சல் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு (சி பிரிவு ஊழியர்கள்) மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி கூறிய தாவது: மத்திய அரசு விடுமுறையை முடிவு செய்யும் குழுவில் அஞ்சல்துறை அதிகாரிகள் இடம்பெறவில்லை.
பிற துறை ஊழியர்களுக்கு ஜன. 14 சனிக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாக இருப்பதால் பொங்கல் பண்டிகையை விடுமுறை நாள் பட்டியலில் சேர்க் காமல் விட்டுள்ளனர். தமிழகத்தின் முக்கியமான பண்டிகை பொங்கல். தமிழர்கள் பண்டிகை இது. இப்பண்டிகையை மத்திய அரசின் பிற ஊழியர்கள் கொண்டாடும் நிலையில், அஞ்சல் துறை ஊழியர்களுக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் பொங்கல் விடுமுறை வழங்கக் கோரி அதிகாரிகளிடம் தொழிற்சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதில் முடிவு ஏற்படாவிட்டால் வழக்கு தொடர்வோம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...