தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலைப்
பள்ளி, சி.பி.எஸ்.சி., பள்ளிகளின் பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட
நிர்வாகிகள் மாநாடு, பெரம்பலுாரில் நடந்தது.
மாநாட்டில், மாநில பொதுச் செயலர் நந்தகுமார் பேசியதாவது:கடந்த, 2014 - -15,
2015 - -16 என, இரண்டு ஆண்டுகளுக்கு இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ்,
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய, 300 கோடி ரூபாய் நிதியை
தரவில்லை.இந்த நிதியை உடனடியாக அளிக்க வேண் டும். இல்லையென்றால் வரும்
கல்வியாண்டில், இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி, 'அட்மிஷன்' போட
மாட்டோம்.
அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள, 10 ஆயிரம் பள்ளிகளுக்கு உடனடியாக
அங்கீகாரம் அளிக்க வேண்டும். அப்பள்ளிகளில் பயிலும், 10 மற்றும் பிளஸ் 2
மாணவ, மாணவியரை, அரசு பொது தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.நர்சரி, பிரைமரி
பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று
வழங்க, லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் ஆகிறது.
மேலும் ஓராண்டுக்கு பள்ளி வாகனங்களை, நான்கு முறை, எப்.சி., செய்யும்
முறையை வன்மையாக கண்டிக்கிறோம். இதர வாகனங்கள் போல, பள்ளி வாகனங்களும்
ஆண்டுக்கு ஒருமுறை, எப்.சி., செய்யும் முறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு
அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...