பிளஸ்
2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால்
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல், ஜன., 29 வரை, தங்கள் ஹால் டிக்கெட்டை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்றவை குறித்து, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாதோருக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...