கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதிய திட்டத்துக்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நாடு முழுவதும்
கிராமப்புற வீட்டு வசதியை ஊக்குவிக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீட்டு வசதியை ஏற்படுத்தும் வகையிலும்
இத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிராப்புறங்களில் புதிதாக வீடு கட்டுதல் அல்லது பழைய வீட்டை
சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.2 லட்சம் வரை பெறப்படும் வீட்டுக்கடன்
வட்டியில் மானியம் வழங்கப்படும். அதேநேரம் பிரதமரின் கிராமப்புற வீட்டு
வசதி திட்டத்தின் (பிஎம்ஏஒய்-ஜி) கீழ் ஏற்கெனவே பயனடைந்தவர்களுக்கு இது
பொருந்தாது.
இந்தத் திட்டம் ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டு வசதி
வங்கியின் (என்எச்பி) மூலம் செயல்படுத்தப்படும். வீட்டுக் கடன் பெறும்
வாடிக்கையாளர் சார்பில் 3 சதவீத வட்டியை மத்திய அரசு என்எச்பி-க்கு
செலுத்திவிடும்.
பின்னர் வாடிக்கையாளர் கடன் பெற்றுள்ள வங்கிக்கு என்எச்பி இந்தத் தொகையை
அனுப்பி வைக்கும். இதனால், வாடிக்கையாளர்களின் மாதாந்திர தவணை கணிசமாகக்
குறையும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...