போனஸ் பணத்தை, வங்கியில் இருந்து எடுக்க முடியாமல், இரண்டு லட்சம் தோல்
தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
'ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற
அறிவிப்புக்கு பின், வங்கிகள், ஏ.டி.எம்., மையங்களில், பணத்திற்கு கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில், பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல்
அவதிப்பட்டனர்.வேலுார் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு,
விஷாரம், ராணிப்பேட்டை பகுதி தோல் தொழிற்சாலைகளில், மூன்று லட்சம் பேர்
வேலை செய்கின்றனர்.
இதில், இரண்டு லட்சம் தொழிலாளர்களுக்கு, சம்பளம், போனஸ் ஆகியவை, அவரவர் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், பொங்கல் போனஸ் மற்றும் டிச., மாதத்திற்கான சம்பளம், தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு
வைத்துள்ளனர்.தற்போது, ஏ.டி.எம்., மையங்களில் தினமும், 4,500 ரூபாய் மட்டும் வருவதாலும், நிறைய ஏ.டி.எம்.,கள் பணம் இல்லாமல் மூடி கிடப்பதாலும், சம்பளம், போனஸ் எடுக்க முடியாமல், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் சங்க துணை தலைவர் பாலு கூறுகையில், ''வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருந்தாலும், 4,000 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். இதனால், வங்கி கணக்கில் பணம் இருந்தும், எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் கடன் வாங்கி வருகின்றனர். எனவே, தொழிலாளர்களின் பணத்தை, ஒரே தவணையில் வழங்க வேண்டும்,'' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...