பிளஸ் 2 மாணவர்கள், உயிரியலில் அதிக
மதிப்பெண் பெறும் வகையில், ஆன்லைனில், 'டிப்ஸ்' வழங்கி, தனியார் பள்ளி
ஆசிரியர், இலவச சேவையாற்றி வருகிறார்.
தமிழகத்தில், தற்போதைய நடைமுறைகளின் படி, மருத்துவம் படிக்க, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும்; அதிலும், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறுவது, மிக அவசியம். வேளாண் படிப்பு, விலங்கியல் படிப்புக்கும், உயிரியல் மதிப்பெண்கள் முக்கியம்.
இந்நிலையில், உயிரியல் பாடத்தை மாணவர்கள் புரிந்து படித்து, அதிக மதிப்பெண்கள் பெற வசதியாக, சென்னை, புரசைவாக்கம், எம்.சி.டி., முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர், சவுந்தர பாண்டியன், ஆன்லைனில் மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கிறார்.முக்கிய பாடங்கள், தாவரங்கள், விலங்குகளின் அறிவியல் பெயர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், விடைகளை எழுதும் முறை என, பல தகவல்களை, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' மற்றும் rspbiology@gmail.com என்ற, இ - மெயில் மூலமும், இலவசமாக பகிர்ந்து வருகிறார்.
இது குறித்து, சவுந்தர பாண்டியன் கூறியதாவது: சென்னையை தவிர, மற்ற மாவட்ட மாணவர்களுக்கும், தரமான பயிற்சி முறை தேவை என்பதால், ஆன்லைன் பயிற்சியை இலவசமாக நடத்துகிறேன். மாணவர்களின், இ - மெயில் முகவரி, வாட்ஸ் ஆப் எண்களை அளித்தால், அவர்களுக்கு, படங்களுடன் குறிப்புகள், 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' பைல்கள் போன்றவற்றை, இலவசமாக அனுப்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Add my num what's up
ReplyDelete