தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க
வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று
முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு,
முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ,
மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின்
கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு
தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய
அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில்
நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும்
கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக்
கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2
வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும்
கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது.
வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில்
கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு
படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க
வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை
முடிவு செய்துள்ளது.
இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle
order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்
என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில்
எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி
அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...