மதுரை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து
செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் நான்கு கட்ட
போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர், செல்வம் கூறியதாவது: கடந்த பிப்ரவரியில் புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, சம்பளக்குழு அமைப்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராடினர்.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை விதி, 110ன் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது; இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.நான்கு லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. எட்டாவது சம்பள குழு அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, பிப்., 2ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், மார்ச் 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி, 18 முதல் 25 வரை, வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள், 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...